ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 8 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய இப்ராகிம் ஜட்ரான் 22 ரன்னிலும், ரஹ்மத் ஷா 7 ரன், ஹஸ்மத்துல்லா ஷாகிடி 4 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதையடுத்து களம் இறங்கிய நபி 23 ரன், ஜட்ரான் 10 ரன், நைப் 20 ரன் என அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் ஆப்கானிஸ்தான அணி 22.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இலங்கை அணி தரப்பில் சமீரா 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றலாம் என்ற நிலையில் இலங்கை அணி ஆடியது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய திமுத் கருணாரத்னே மற்றும் நிசாங்கா இருவரும் அதிரடியாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்திய நிலையில் நிசாங்கா 51 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் இலங்கை அணி 16 ஓவரில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 120 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மட்டுமின்றி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இறுதி போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடரின் ஆட்டநாயகனாகவும் துஷ்மந்த சாமீர தெரிவானார்.