விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு விளக்கமளித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபைக்கு தாம் அரசியல் தலையீடு செய்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது என விளையாட்டுத்துறை அமைச்சர் ரணசிங்க ஐசிசிக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க கணக்காய்வு திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிதி முறைகேடுகளுக்காக அவர்களுக்கு எதிராக எதிர்கால சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் SLC அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
SLC அதிகாரிகள் ஐசிசியின் நேர்மை மற்றும் நல்ல பெயரைப் பயன்படுத்தி தங்கள் தவறுகளை பாதுகாக்க முயற்சிப்பதாக விளையாட்டு அமைச்சர் மேலும் கூறினார்.
தாம் அல்லது இலங்கை அரசாங்கத்தினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு எந்தவித அரசியல் தலையீடும் செய்யப்படவில்லை என உறுதியளித்த விளையாட்டு அமைச்சர், SLC சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனக் குறிப்ப்பிட்டுள்ளார்.