free website hit counter

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் - 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்திய அணி

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பெங்களூருவில் 14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இறுதி ஆட்டத்தில் நேற்றிரவு இந்திய அணி குவைத்தை எதிர்கொண்டது.

இந்திய அணி தரவரிசை பட்டியலில் நூறாவது இடத்திலும் குவைத் 141 வது இடத்திலும் இருந்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே குவைத் அணி வீரர்கள் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

போட்டியின் 14வது நிமிடத்தில் குவைத் வீரர் அன்பல் முதல் கோலை அடித்தார். இதனை எடுத்து இந்திய அணி முதல் பாதியில் 39 வது நிமிடத்தில் செங்காத்தே பதில் கோல் அடித்து ஸ்கோரை சமன் செய்தார். இதனை அடுத்து போட்டி முழுவதுமே இரு அணி வீரர்களும் கோல் போட முடியாமல் தடுமாறினர். 90 நிமிடம் முடிவடைந்த பிறகும் இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலை இருந்தார்கள்.

அதன் பிறகு கூடுதலாக அரை மணி நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முடியவில்லை. இதனை அடுத்து போட்டி சமனின் முடிவடைந்தது. வெற்றியாளர்களை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் பெனால்டி சூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது.

இதில் குவைத் முதல் வாய்ப்பை வீணடிக்க இந்திய அணி தொடர்ந்து மூன்று வாய்ப்பையும் கோலாக மாற்றியது. அதேசமயம் குவைத் அடுத்த நான்கையும் கோலாக மாற்ற இந்திய அணி தங்களுக்கு கிடைத்த நான்காவது வாய்ப்பை கோட்டை விட்டது. இதன் மூலம் ஐந்து வாய்ப்பில் இரு அணிகளும் நான்குக்கு நான்கு என்ற கணக்கில் இருந்தது. இதனை அடுத்து ஆறாவது வாய்ப்பை குவைத் கோட்டை விட இந்திய அணி ஆறாவது வாய்ப்பில் கோல் அடித்தது. இதன்மூலம் 4க்கு 5 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஒன்பதாவது முறையாக தெற்காசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்திய அணி வெற்றி பெற்றது. பயிற்சியாளர் இகார் ஸ்டீமாக் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 15 முறையாக தோல்வியை தழுவாமல் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்திய அணி இன்டர் காண்டினல் கோப்பையை வென்ற நிலையில் தற்போது தெற்காசிய சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்று அசத்தியிருக்கிறது. இதன் மூலம் இந்தியா கால்பந்து உலகில் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula