free website hit counter

எந்தத் தப்பும் செய்யவில்லை - தனுஷ்க குணதிலக பாலியல் குற்றச்சாட்டில் இருந்து விடுதலை

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் குற்றச்சாட்டில் குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாரா ஹகெட் இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தார்.

கடந்த ஆண்டு 20-20 உலகக் கிண்ண தொடருக்காக இலங்கை அணியுடன் தனுஷ்க அவுஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்திருந்த நிலையில் முதல் போட்டியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், டிண்டர் என்ற சமூகவலைத்தளம் ஊடாக அறிமுகமான பெண்ணொருவரை சந்தித்து, சிட்னியின் கிழக்குப் புறநகரில் உள்ள அவரது வீட்டிற்குத் சென்ற கிரிக்கெட் வீரர் தனுஷ்க, தனது அனுமதி இல்லாமல் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என குறித்த பெண் தனுஷ்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்.

அதற்கமைய, கடந்த 2022 ஒக்டோபர் 6 ஆம் திகதி அதிகாலை சிட்னியின் ஹையாட் ரீஜென்சி விடுதியில் தனுஷ்க கைது செய்யப்பட்டார்.

குறித்த வழக்கில் , கடந்த 2022 நவம்பரில் பிணை பெற்றபோது டிண்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கு தனுஷ்கவுக்கு முதலில் தடை விதிக்கப்பட்டது.

மேலும், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தடை விதிக்குமாறு சட்டமா அதிபரால் பரிந்துரைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த பெப்ரவரி 23ம் திகதி தனுஷ்க குணதிலக்கவிற்கு வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்லவும் ஒரு மாதத்திற்கு இரண்டு தடவைகள் அவுஸ்திரேலியாவிற்குள் விரும்பிய இடத்திற்கு விமானத்தில் பயணிக்கவும் சிட்னி டவுனிங் சென்டர் பிராந்திய நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணைகள் மூன்று நாட்கள் நடைபெற்றது.

இந்த விசாரணைகளை தொடர்ந்து இன்றைய தினம் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula