இந்தியாவில் 12 ஆவது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் ஃப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் உம் மும்பை இந்தியன்ஸும் பலப் பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை எடுத்தது. 132 என்ற எளிமையான இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மும்பை அணி 18.3 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக சூர்யகுமார் யாதவின் கேட்ச் ஒன்றினை சென்னை வீரர் முரளி விஜய் பிடிக்கத் தவறியமை என்பது கூறப்படுகின்றது. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட சூர்யகுமார் 54 பந்துகளில் 71 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
நாளை புதன்கிழமை டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் 2 ஆவது தகுதிச் சுற்று ஆட்டத்துக்காக மோதுகின்றன.