10 அணிகள் பங்கேற்ற 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் கடந்த மார்ச் 31-ந்தேதி தொடங்கியது.
70 லீக் போட்டிகளும் நடந்த முடிந்ததை தொடர்ந்து, ஒரு வழியாக பிளே-ஆஃப் சுற்றில் விளையாட உள்ள 4 அணிகள் எவை என்பது கடைசி லீக் போட்டி மூலம் உறுதியாகியுள்ளது.
இந்த லீக் ஆட்டத்தின் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய நான்கு அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள், தலா 7 வெற்றிகளுடன் 5 மற்றும் 6வது இடத்தில் நீடிக்கிறது. அதேபொன்று, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் தலா 6 வெற்றியுடன் 7 மற்றும் 8வது இடத்தை பிடித்தன. டெல்லி மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள், முறையே 5 மற்றும் 4 வெற்றிகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டன.
சென்னை சேப்பாக்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. 24-ந்தேதி வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டத்தில் லக்னோ-மும்பை அணிகள் சந்திக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.