மதுபோதையில் மும்பை வீரர் 15-வது மாடியின் பால்கனியில் சாஹலை தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அவர் தற்போது 2013 ஆம் ஆண்டு தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் நடந்த உரையாடலை ராஜஸ்தான் அணி வெளியிட்டுள்ளது. அதில் பேசிய யுஸ்வேந்திர சாஹல் கூறுகையில், " 2013 ஆம் ஆண்டு நான் மும்பை அணியில் நான் இருந்த போது பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்திற்காக அங்கு இருந்த விடுதியில் நாங்கள் தங்கி இருந்தோம்.
அப்போது அணியின் சக வீரர் ஒருவர் என்னை திடீரென்று அவர் தூக்கி கொண்டு 15வது மாடி பால்கனியிலிருந்து தொங்க விட்டார் . நான் அதிர்ச்சியில் உறைந்தேன். என்னை காப்பாற்றுங்கள் என்று கத்தினேன்.
அந்த வீரரின் கழுத்தை நன்கு பிடித்து கொண்டேன். அப்போது அங்கிருந்த சக வீரர்கள் என்னை காப்பாற்றினார்கள். நான் பயத்தில் மயங்கிவிட்டேன். பிறகு தண்ணீர் முகத்தில் தெளித்த பிறகு தான் நினைவு திரும்பியது. அன்று சிறு தவறு நடந்து இருந்தாலும் நான் 15வது மாடியிலிருந்து கீழே விழுந்திருப்பேன். இந்த காரியத்தை செய்த வீரரின் பெயரை வெளியிட விரும்பவில்லை " என அவர் தெரிவித்தார்.
சாஹலின் இந்த பரப்பரப்பு தகவலால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சஹாலிடம் இது குறித்து பிசிசிஐ முழுமையாக விசாரணை நடத்தி அந்தக் குறிப்பிட்ட வீரருக்கு தண்டனை வழங்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.