லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி என முன்னாள் வீரர்களை வைத்து நடைபெறும் கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்குகிறது.
இதனை முன்னிட்டு கொல்கத்தாவில் வரும் செப்டம்பர் 16-ம் தேதி ஒரு சிறப்பு ஆட்டம் நடைபெறுகிறது.
இதில் இந்திய மகாராஜா அணியும் உலக ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகிறது. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக நடைபெறும் இந்தப் போட்டியில் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். இதே போன்று அவருக்கு ஜோடியாக அதிரடி வீரர் விரேந்திர சேவாக் அணியில் இடம்பெற்றுள்ளார். இதே போன்று முகமது கைப்பும் இந்திய மகாராஜா அணியில் இடம்பெற்றுள்ளார்.
உலக ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கல்லீஸ், ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன் ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.