ஆசிய பேட்மிண்டன் போட்டியில் உலக சாம்பியனான யமாகுச்சியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சீன வீராங்கனை வென்றார்.
இந்த ஆட்டம் 1 மணி 18 நிமிடங்கள் நீடித்தது. 22 வயதான வாங் ஸி தனது பேட்மிண்டன் வாழ்க்கையில் வென்ற மிகப்பெரிய பட்டம் இதுவாகும். முன்னதாக யமாகுச்சி அரைஇறுதியில் சர்ச்சைக்கு இடையே இந்தியாவின் பி.வி.சிந்துவை தோற்கடித்திருந்தார். அரைஇறுதியில் தோல்வி கண்ட பி.வி.சிந்து, தென்கொரியாவின் அன் செயோங் ஆகியோர் வெண்கலப்பதக்கம் பெற்றனர்.
ஆண்கள் பிரிவில் 7-ம் நிலை வீரர் மலேசியாவின் லீ ஸி ஜியா 21-17, 23-21 என்ற நேர் செட் கணக்கில் ஜோனதன் கிறிஸ்டியை (இந்தோனேஷியா) தோற்கடித்து சாம்பியன் கோப்பையை வசப்படுத்தினார்.