free website hit counter

ஆசிய கோப்பை : இந்தியாவிற்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் இலங்கை அணி திரில் வெற்றி

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
துபாயில் இன்று நடைபெற்ற சூப்பர் 4 பிரிவு ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 6 ரன்னில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் சூர்யகுமார் யாதவ், ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார்.

அதிரடியில் இறங்கிய ரோகித் சர்மா, 72 ரன்னில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் 34 ரன்னில் அவுட்டானார். பாண்ட்யா மற்றும் ரிஷப் பண்ட் 17 ரன்னிலும் ஹூடா 3 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்தது.

இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா மற்றும் குசல் மெண்டிஸ் களமிறங்கினர். சிறப்பான தொடக்கம் அளித்த இரு வீரர்களும் அரைசதம் கடந்தனர்.

நிசங்கா 52 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய மெண்டிஸ் 57 ரன்கள் குவித்தார்.

இறுதியில், 19.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி 174 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை திரில் வெற்றிபெற்றது. கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ராஜபக்சா 17 பந்துகளில் 25 ரன்களும், ஷனகா 18 பந்துகளில் 33 ரன்கள் குவித்தும் இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தெரிவானார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: