free website hit counter

தனுஷ்க குணதிலக்க மீதான 3 குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுள்ளன

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தனுஷ்க குணதிலக்க மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட நான்கு பாலியல் குற்றச்சாட்டுகளில் மூன்று குற்றசாட்டுகள் இன்று கைவிடப்பட்டுள்ளன.

இன்று சிட்னி நீதிமன்றத்தில் 3 குற்றச்சாட்டுகளை அரசு வழக்கறிஞர் வாபஸ் பெற்றார். வழக்கு ஜூலை 13ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற இருபதுக்கு - 20 உலகக் கிண்ண தொடர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றிருந்த போது தனுஷ்க குணதிலக்க விளையாடிய முதல் போட்டியில் அவருக்கு உபாதை ஏற்பட்டதால் அவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், சமூகவலைத்தளம் ஊடாக அறிமுகமான பெண்ணொருவரை சந்தித்து, சிட்னியின் கிழக்குப் புறநகரில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு தனுஷ்க குணதிலக்க சென்றுள்ளார்.

இந்நிலையில், தனது அனுமதி இல்லாமல் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என குறித்த பெண் தனுஷ்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்.

இதையடுத்து தனுஷ்க குணதிலக்க கடந்த 2022 ஆம் அண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: