இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மொயீன் அலி 47 ரன், டேவிட் வில்லே 41 ரன், ஜேனி பேர்ஸ்டோவ் 38 ரன் எடுத்தனர்.
இந்தியா சார்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டும், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மா, டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். தவான் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் டக் அவுட்டானார். விராட் கோலி 16 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. சூர்யகுமார் யாதவ் 27 ரன், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா தலா 29 ரன், ஷமி 23 ரன் எடுத்தனர்.
இறுதியில் இந்திய அணி 38.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லே 6 விக்கெட்டுகளும், டேவிட் வில்லி, மொயின் அலி, லிவிங்ஸ்டன் மற்றும் கார்சே ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.