free website hit counter

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிடலாம்னு நினைச்சேன்! அப்பா சொன்ன வார்த்தை... மனம் திறந்த அஸ்வின்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தான் கடந்து வந்த கடினமான பாதை குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் மனம் திறந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். இந்நிலையில் தான் கடந்து வந்த கடினமான பாதை குறித்தும், பட்ட சிரமங்கள் குறித்தும் அவர் மனம் திறந்துள்ளார்.

அஸ்வின் கூறுகையில், 2018ஆம் ஆண்டு வாக்கில் எனக்கு ஏற்பட்ட காயம் மற்றும் சில வீரர்களின் வருகை என எனது இடம் பெரிய கேள்விக்குறியாகியது. அதுமட்டுமின்றி இங்கிலாந்து தொடர், அவுஸ்திரேலிய தொடர் என எனக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் மறுக்கப்பட்ட போது என்னுடைய கிரிக்கெட் பயணம் முடிந்ததோ என்ற கவலையில் இருந்தேன்.

மேலும் அப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடலாம் என்று கூட யோசித்தேன். ஆனால் நான் இதுபோன்று எப்போது அழுத்தத்தில் இருந்தாலும் என்னுடைய மனைவியிடம் மனம் திறந்து பேசுவேன்.

அதேபோன்று அந்த கஷ்டமான நேரங்களில் எனது தந்தையும் எனக்கு உறுதுணையாக இருப்பார். அப்போது அவர் என்னிடம் நான் உயிரோடு இருக்கும்போதே ஒயிட் பால் கிரிக்கெட்டில் உன்னுடைய கம்பேக்கை நிச்சயம் பார்ப்பேன் என்றார். அவர் கூறயபடியே நான் விளையாடினேன் என கூறியுள்ளார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: