உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.
போராட்டம் நிறைந்த உலகில்
பொய்யும் புரட்டும் நிலைக்கிறது
ஏமாற்றம் கலந்த பிறப்பில்
மாற்றம் எங்கே கிடைக்கிறது!
தொழிலாளர் வர்க்கம் எல்லாம்
எங்கோ செத்துப் பிழைக்கிறது
அதிகார கைகளில் எங்கள்
வாழ்க்கை வளைந்து நெழிகிறது!
...
பூவன் மதீசனின், இசைக்கோப்பும், குரலும் பாடலில் காணும் தனித்துவ அழகை மெருகூட்டும், கச்சிதமான காட்சியாக்கமும், காட்சித் தொகுப்பும், கருத்துச் செறிவுடன் கூடிய பாடல் வரிகளும், அவற்றினூடு பேசப்படும் மக்கள் அரசியலும், வாழ்விலும், பாடலின் அழகியலையும், உள்ளடக்கத்தினையும், ரசனை மிக்கதாக்கின்றது.
பாடலைக் காணலாம்; உருவாக்கிய கலைஞர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறலாம்.
Music-Poovan Matheesan
Lyrics- KS Shanthakumar
Voice- Poovan Matheesan
Rap- Ragu Branavan
Rap Verse - Ragu Branavan
Direction - Raj Sivaraj
Performer - Kajan Thas, Poovan Matheesan
Edit- Arun Yogathasan
Designs - San Sandran
Lighting- Kajan thas
Production Unit- Thilaksan, Umesh , aravinthan