உத்தராயணம் முதல் தடசணாயனம் வரை என்று ஒரு வருடத்தைக் இந்துமதத்தில் குறிப்பிடுவர்.
முதல் ஆறுமாதகாலத்தை அதாவது தை முதல் ஆனி வரை உத்தராயணம் என்றும் ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயனம் என்றும் அழைப்பர். பகல் தேவர்களுக்கு உரிய காலமாகவும் இரவு பிதுர்களுக்கு உரிய காலமாகவும் கூறப்பட்டுள்ளது.ஆதலால் தட்சணாயானம் ஆரம்பமாகும் மாதமான ஆடிமாதத்தில் வரும் அமாவாசை திதி அன்று அமாவாஸ்யா தர்ப்பணம் சைவமக்களால் அனுஸ்டிக்கப்படுகிறது. அமாவாசை காலத்தில் இறந்த சகல பித்ருக்களும் நினைக்கப்படுகின்றனர். ஆடி அமாவாசைக் காலத்தில் தர்ப்பணம் செய்யப்படாத ஆத்மாக்க்ள்அவர்களுக்காகவும் வைதிகர்களால் செய்யப்படுகிறது.
அமாவாஸ்யா என்றால் சூரியனும் சந்திரனும் சேர்ந்து அருகில் இருப்பது என்பதாகும்.இதனால் இதை தரீசம் என்றழைப்பர் .சூரியனும் சந்திரனும் சந்திப்பது என்பது இதன் பொருளாகும்.இறந்த சகல ஆத்மாக்களின் நன்மைக்காக அவர்கள் மோட்ச கதி அடையும் பொருட்டு செய்யும் தர்ப்பண கைங்கரிய முடிவில் பின்வருமாறு கூறி தர்ப்பணம் செய்வது குறிப்பிடத்தக்கது. எவர்களுக்கு தர்ப்பணம்செய்வதற்கு தாயோ தந்தையோ சிநேகிதரோ, உரிமையாளர்களோ,உறவினரோ இல்லையோ அவர்கள் எல்லோரும் நான் தர்ப்பை நுனியால் விடும் தீர்த்தத்தால் திருப்தியடையட்டும். இவ்வாறு வைதிக அந்தணர்களால் எள்ளும் நீரும் தர்ப்பணம் செய்தபின் தர்ப்பை நுனி நீரால் இறைத்து வழிபடுவர்.
இது அவர்கள் பொதுத்தர்மமாகக் கைக்கொள்வர். ஆலயங்களில் அந்தணர்கள் நாட்டு மக்களின் நன்மைக்காக பூஜை நிறைவில் சர்வே ஜனா சுகினோ பவந்து.என்று கூறி எல்லோரும் சுகமாக இருக்க வேண்டும். என்றே இறைவனிடம் இரஞ்சுகின்றனர்.ஆகவே நாமும் இறந்த தாய்தந்தையர்களை ஆடி
அமாவாசைக் காலத்தில் நினைந்து விரதம் அனுட்டித்து பிதுர்க்கடன் தீர்த்தல் அவசியம், இம்மாதம் [10\ 8 \18] ம் திகதி வெள்ளிக்கிழமை வரும், இந்நாளில் இப்புவியில் பிறந்து வாழும் இந்துக்களாகிய நாம் அனைவரும் இறந்த மூதாதையரை நினைந்து ஆலயம் சென்று வழிபாடாற்றி அந்தணர்மூலம் தர்ப்பணம் செய்து தர்மம் தானம் வழங்கி பிதுர்களின் ஆசிபெற்று சுபீட்சமாக வாழ்வோம்