மந்திரம் என்பது அறிவியல். தத்துவம் தெரியாததை, யூகங்கள் மற்றும் சர்ச்சைகள் மூலம் விளக்க முயல்வது. அறிவியல் தெளிவாக உள்ளது. தத்துவம் மாயையை மையமாகக் கொண்டது.
ஓம்காரம் ஒரு தத்துவம் அல்ல, அது ஒரு அறிவியல். உதாரணமாக தமிழில் சுழியம் என்றால் அது வெற்றிடமானது, சூனியமானது என்பது ஒரு தத்துவம் அல்ல அது அறிவியல். சுழியத்தின் முன் சேரும் இலக்கங்களினால் இலக்கங்களின் பெறுமானமும், சுழியத்தின் பெறுமானமும் கூடும். மாறாகச் சுழியத்தின் பின்னால் நிற்கும் இலக்கங்களினால் சுழியத்தினதும், இலக்கங்களினதும் பெறுமானம் மேலும் குறையும். முருகன் விளக்குவது மந்திரம் அல்ல, மண்-திரம், மண்ணின் திறமை அல்லது பூமி விஞ்ஞானம் அல்லது பூமியின் அறிவு.
இங்கே மனித வாழ்வில் மாயை சூழ்ந்த ஒரு தத்துவத்தைப் பார்ப்போம். ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ அல்லது 'Garbage truck theory' என்பதை, தமிழில், ‘குப்பை வண்டி தத்துவம்' என்று அழைக்கலாம்.
மனித சமூகத்தில் பலரும், மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். அவ்வாறானவர்களிடம், விரக்தி, ஏமாற்றம், கோபம் நிறைந்திருக்கும். இத்தகைய குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான். அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது கொடுமைகளை செய்தாலும் பதிலுக்கு நீங்களும் தாக்குதல் நடத்த வேண்டியதில்லை. புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடலாம்.
நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது. நம் வாழ்க்கையின் வெற்றி, 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையும், 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதையும் பொருத்தது. இதை நம் நாட்டார் மொழியில், 'மந்திரம் கால் மதி முக்கால்' என்றார்கள்.