ஆடி மாத சிம்ம இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கிரகநிலை: ராசியில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றங்கள்:
17-07-2025 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-07-2025 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
29-07-2025 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
03-08-2025 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்யும் குணமுடைய சிம்ம ராசியினரே எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம்.
குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள்.
பெண்கள் உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம். ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவது உங்களுக்கு மன நிம்மதி ஏற்படுத்தித் தரும்.
கலைத்துறையினருக்கு பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும்.
வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும். சக வியாபாரிகளுடன் ஒத்துப் போவீர்கள். பெரிய கடன்களிலிருந்து விடுபடவும் காலகட்டமிது. உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும்.
அரசியல்வாதிகள் வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடலாம். பதவிகளில் முன்னேற்றம் உண்டாகும் காலமிது. கடின உழைப்பும், புத்தி சாதுர்யமும் பதவி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.
விவசாயிகள் பயிர்களை கவனமுடன் பாதுகாத்துக் கொள்வது நல்லது. நஷ்டம் உண்டாக வாய்ப்புகள் உண்டு, எனினும் அனுபவமும், சமயோஜித புத்திக் கூர்மையும் விளைச்சலில் லாபத்தை ஈட்டித் தரும்.
மாணவர்கள் சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை. விளையாடும் போதும், சக மாணவரிகளுடன் பழகும் போதும் கவனத்துடன் செயல் படுவது நன்மை தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, புதன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி;
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவபெருமானை அபிஷேக நேரத்தில் வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். நன்மை ஏற்படும். முடிந்தால் அபிஷேகத்திற்கு உண்டான பொருள்களை வாங்கிக் கொடுக்கலாம்,
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஸ்ரீபவலிங்காய நம” என மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 17, ஆக 12, 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 06, 07
ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான மார்ச் மாதப் பலன்களை உரிய ராசிகளுக்கான படங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast
)
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: