வெள்ளிக்கிழமை ஆப்கானின் பிரதான பாக்ராம் விமானத் தளத்தை விட்டு இறுதி அமெரிக்க நேட்டோ துருப்புக்களும் தலிபான்களின் கடும் தாக்குதல்களுக்கு மத்தியில் வெளியேறியுள்ளன.
வியாழன் இரவு ஆப்கானில் படக்ஷான், பக்லான் மாகாணங்களில் தலிபான்கள் தொடுத்த தாக்குதல்களில் இராணுவ வீரர்கள் உட்பட குறைந்தது 32 வீரர்கள் பலியாகி இருந்தனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முற்றாக வெளியேறும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. தலைநகர் காபூலில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்ராம் விமானத் தளம் ஆப்கானின் மிகப் பெரிய விமானப் படைத் தளம் என்பதால் இதில் இருந்து அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேறியது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப் படுகின்றது. மறுபுறம் யுத்த நிறுத்தத்துக்குப் பின் 3 ஆவது முறையாக காசா மீது இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஹமாஸ் போராளிகளின் ஆயுத உற்பத்தித் தளங்களைக் குறி வைத்தும் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசியுள்ளதை இஸ்ரேல் உறுதிப் படுத்தியுள்ளது.