ஆப்கானில் கடந்த 20 வருட யுத்தத்தில் அமெரிக்கா தோற்று விட்டது என அமெரிக்க மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
ஆயுத சேவைகளுக்கான இல்லத்துக்கான கூட்டத்தில் பேசும் போது அமெரிக்க கூட்டு இராணுவத்தின் தலைமை அதிகாரியான ஜெனெரல் மார்க் மில்லேய் என்பவரே இக்கருத்தைக் கூறியுள்ளார்.
இதன் போது அவர் காபூலில் இறுதியில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றும் விதத்தில் அமைந்து விட்ட சூழலில் எமது உரிய இலக்குகளை அடைய முடியாதே நாம் அங்கிருந்து வெளியேறியுள்ளோம் என்பது வெளிப்படை என அவர் தெரிவித்தார். மேலும் இராஜ தந்திர அடிப்படையிலும் ஆப்கான் யுத்தம் ஒரு பெரும் தோல்வி என்றும், இறுதிக் கட்டத்தில் காபூலில் இருந்து மிகக் குழப்பத்தின் மத்தியில் வெளிநாட்டவர்களை மீட்ட செயற்பாடு அமைந்திருந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆனாலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவம் முற்றுகையிட்டிருந்த போது கற்றுக் கொண்ட பாடங்களும் அதிகம் என்பதையும் மறுக்க முடியாது என்றும் ஜெனெரல் மார்க் மில்லேய் தெரிவித்தார்.