புதன்கிழமை 2050 இற்குள் கார்பன் நடுநிலை நிலையை எட்டும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடென் கைச்சாத்திட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் 2030 இற்குள் பச்சை வீட்டு விளைவை (புவி வெப்பமயமாதல்) ஐ ஏற்படுத்தும் வாயுக்களது வெளியீட்டை 65% வீதமாகக் குறைப்பதற்கும், 2035 இற்குள் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை மட்டுமே பயன்படுத்தவும் இலக்கு வகுக்கப் பட்டுள்ளது.
பருவ நிலை மாற்றம் காரணமாக உலகில் ஏற்படக் கூடிய அனர்த்தங்களைத் தவிர்க்கும் விதத்தில் பச்சை வீட்டு விளைவு வாயுக்களது வெளியேற்றத்தைக் கட்டுப் படுத்தவும், அமெரிக்க அரசால் தூரநோக்குடன் கூடிய செயற்திட்டங்களை செயற்படுத்தவும் இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் முதலாவதும் முக்கியமானதுமான இலக்கு 2030 இற்குள் அமெரிக்க அரச கட்டடங்கள் 100% வீதம் கார்பன் மாசுபாட்டை வெளியிடாத விதத்தில் உற்பத்தி செய்யப் படும் மின்சாரத்தையே பாவிக்கும் வழியை உண்டாக்குவது ஆகும்.