சுவீடனில் 25 ஆண்டுகளாக வரலாறு காணத உறைபனி குளிர்நிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.
லாப்லாந்தில் (Lapland) பகுதியிலுள்ள க்விக்ஜோக்கில் (Kvikkjokk) வெப்பநிலை -43.6 பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் பரவலாக காணப்படும் இக் குளிர்ந்த காலநிலை, சனிக்கிழமை தலைநகர் ஸ்டாக்ஹோமை அடையும் என்று வானிலை அறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டாக்ஹோமில் இருந்து வடக்கே 900 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அல்வ்ஸ்பைன் நகராட்சியில் 35 டிகிரி வெப்பநிலை நிலவும் நிலையில், அதிகாலை நான்கு மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக நகராட்சி எச்சரித்துள்ளது. சுமார் 4ஆயிரம் வீடுகள் உள்ள அப்பகுதியில் 3,000 வீடுகள் இருளில் உள்ளன. நேரடி சூரிய ஒளி இல்லாத நிலைமை மேலும் மோசவும், பயங்கரமான குளிரால் வேலை மிகவும் கடினமாகியுள்ள நிலையிலும், இன்று பிற்பகல் 2 மணிக்குள் மின்சாரத்தை மீட்டெடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆர்க்டிக் பகுதியில் இருந்து வரும் பெரும் குளிர், தெற்கு ஸ்வீடனில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, அங்கு நூற்றுக்கணக்கான கார்கள் பனியால் 10 மணி நேரத்திற்கும் மேலாக வீதிகளில் தடுக்கப்பட்டுள்ளன. மேலும் இரவில், கடுமையான குளிரும், பனிப்புயல் மற்றும் பலத்த காற்று காரணமாக ஸ்காண்டிநேவியாவின் பல பகுதிகளில் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டுள்ளது.
பனிப்புயல் நாடு முழுவதும் சாலைகளில் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகளை சிக்க வைத்தது. அவர்களில் ஒருவர் தேசிய தொலைக்காட்சிக்கு 16 மணிநேரம் தண்ணீர் அல்லது உணவு இல்லாமல் காரில் இருந்ததாக கூறினார், ஏனெனில் அவசரகால சேவைகள் சாலைகளை சுத்தம் செய்வதற்கு முன் காத்திருப்பு நேரம் மிக நீண்டதாக இருந்தது என்று தெரிவிக்கப்டுகிறது.