கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கிய ஷாஹீன் சூறாவளி ஓமன் நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபிய நாடுகளையும் சூறாவளி தாக்கும் அச்சுறுத்தல் காணப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
ஓமன் நாட்டின் தலைநகரில் ஷாஹீன் சூறாவளி காரணமாக பலத்த மழையும் கடும் காற்று வீசியுள்ளது. இதனால் வெள்ளம் வீதிகளில் சூழ்ந்து பெறும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை வெள்ளம் காரணமாக 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடலோரப் பகுதிகள் மற்றும் தலைநகர் மஸ்கட்டுக்குச் செல்லும் சில விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து பல பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அண்டை நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஓமன் நாட்டின் பெரும்பாலான ஐந்து மில்லியன் மக்கள் மஸ்கட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்வது குறிப்பிடதக்கது.