அமெரிக்காவின் கோவிட் - 19 நோய் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மீண்டும் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று உயர் சுகாதார ஆணையம் கூறியுள்ளது.
அமெரிக்காவில் கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் முகக்கவசம் அணியத்தேவையில்லை என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது டெல்டா திரிபு நோய்ப்பரவலுக்கான அபாயம் நிலவுவிவருகிறது. இதனையடுத்து கணிசமான மற்றும் அதிக பரவல் உள்ள பகுதிகளில், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் பொதுவெளிகளிலும் வீடுகளிலும் முகக்கவசங்களை அணியுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் உள்ளூர் பரிமாற்ற சேவைகள் காரணமாக அதன் அனைத்து ஊழியர்களையும் மீண்டும் முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.