தெற்கு ஸ்பானிஷ் பிராந்தியமான அண்டலூசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 2,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.
கடந்த புதன்கிழமை ஸ்பெயின் நாட்டின் கோஸ்டா டெல் சோலில் உள்ள புகழ்பெற்ற ரிசார்ட் நகரமான எஸ்டெபோனாவில் காட்டுத்தீ பரவத்தொடங்கியது.
மலைப்பகுதியில் பரவி வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுடன் ராணுவப் பிரிவும் இணைந்து பணியாற்றிவருகின்றனர்.
இதனால் அங்கு வசிக்கும் ஆறு நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்த கோடை காலத்தில் ஐரோப்பா நாடுகள் சில பல காட்டுத்தீக்கு உள்ளாகிவருகிறது. காலநிலை மாற்றம் காட்டுத்தீயைத் தூண்டும் வெப்பமான, வறண்ட வானிலையின் அபாயத்தை அதிகரிக்கிறது.
தொழில்துறை சகாப்தம் தொடங்கியதிலிருந்து உலகம் ஏற்கனவே சுமார் 1.2C வெப்பமடைந்துள்ளது எனவும் மேலும் முறையான நடவடிக்கையை உலக நாடுகள் எடுக்காவிடின் வெப்பநிலை உயரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
																						
     
     
    