ஜப்பான் நாட்டின் மத்திய-மேற்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் பேரழிவு ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நில நடுக்கத்தைத் தொடர்ந்து, வீடுகள் பல இடிந்து விழுந்துள்ளன. தெருக்களில் வெள்ளம் பாய்ந்தது. விமான நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் தொலைத் தொடர்புகள் சீரற்றுப் போயுள்ளன.
நேற்று, ஜனவரி 1ம் திகதி ஜப்பானின் மத்திய-மேற்கு கடற்கரையோரத்தில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பின் அங்கு ஏற்பட்டுள்ள இறப்பு எண்ணிக்கை யும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை உள்ளூர் அதிகாரிகளின்படி உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் 48 ஆகப் பதிவாகியுள்ளன. இது மேலும் உயலாம் எனவும் அஞ்சப்படுகிறது. உயிர் பிழைத்தவர்களைத் தேடுவது மோசமான காலநிலையில் பெரும் சவாலாக உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இஷிகாவாவின் மத்திய-மேற்கு மாகாணத்தில் உள்ள நகரம் நிலநடுக்கத்தால் மிகவும் அழிவுற்ற நகரங்களில் ஒன்றாகும். 200 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் தீயில் எரிந்தன இஷிகாவா மாகாணத்தில் 5.6 ரிக்டர் அளவில் பதிவானது.
கடலோர நகரமான சுஸுவில் நிலநடுக்கம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை அழித்துள்ளது. நகரின் துறைமுகத்தில் சரிந்த கூரைகள் மற்றும் கவிழ்ந்த படகுகளைக் காட்டியது. மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் பல வீடுகள் இருளில் மூழ்கின. முதற்கட்ட மதிப்பீடுகளின்படி சுமார் 45,700 குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனஎனத் தெரியவருகிறது.