free website hit counter

சீனாவின் குவாங்ஷௌ நகரில் 7 புதிய கோவிட்-19 தொற்றுக்கள் இனம் காணப் பட்டது

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தெற்கு சீன நகரமான குவாங்ஷௌ இல் ஞாயிற்றுக்கிழமை 7 புதிய கோவிட்-19 தொற்றுக்கள் அண்மையில் இனம் காணப் பட்டுள்ளன.

இதன் மூலம் இப்பகுதியில் மே 21 முதல் பதிவான மொத்த தொற்றுக்கள் 80 ஆக அதிகரித்துள்ளன. சீனா முழுவதும் ஜூன் 5 ஆம் திகதி 30 புதிய தொற்றுக்களும் இது முதல் நாள் 24 ஆகவிருந்ததாகவும் சீனா சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

ஆரம்பம் முதற்கொண்டே கடுமையான நடவடிக்கைகளாலும், அதிகளவு கொரோனா பரிசோதனைகளாலும் வெற்றிகரமாக இந்தப் பெரும் தொற்றைக் கையாண்ட நாடுகளில் முதன்மையாக சீனா உள்ளது. இத்தனைக்கும் கொரோனா வைரஸ் தோற்றம் பெற்ற இடமே மத்திய சீனாவின் ஹுபேய் மாநிலத்திலுள்ள வுஹான் நகர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட்-19 பெரும் தொற்றை வெற்றிகரமாகக் கட்டுப் படுத்தியுள்ள இன்னொரு நாடான அவுஸ்திரேலியாவில் மீண்டும் இரு புதிய தொற்றுக்கள் இனம் காணப் பட்டுள்ளன. இவ்விரு தொற்றுக்களும் அவுஸ்திரேலியாவின் 2 ஆவது அதிக சனத்தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் இனம் காணப் பட்டுள்ளன.

ஆயினும் திட்டமிட்ட படி தலைநகர் மெல்பேர்னில் லாக்டவுன் ஜுன் 10 ஆம் திகதியளவில் மீண்டும் பெறப்படும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது. மறுபுறம் இங்கிலாந்தில் தற்போது அமுலில் இருக்கும் முழு ஊரடங்கு தளர்வுகளில் கட்டுப்பாடுகளை நீட்டிக்கப் பரிசீலனை செய்யப் படுகின்றது. ஆனாலும் இங்கிலாந்தில் தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்தே இருப்பதால் முழுத் தளர்வுக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் இங்கிலாந்தில் கோவிட்-19 இற்குப் பலியானவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை முதன் முறையாக கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பின்னர் உயிரிழப்பு ஏற்படாத தினமாகப் பதிவாகியுள்ளது. உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 173 729 907
மொத்த உயிரிழப்புக்கள் : 3 736 526
குணமடைந்தவர்கள் : 156 861 064
ஆக்டிவ் தொற்றுக்கள் : 13 132 317
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 87 421

நாடளாவிய புள்ளி விபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..) :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 34 204 374 : மொத்த உயிரிழப்புக்கள் : 612 203
இந்தியா : 28 809 339 : 346 784
பிரேசில் : 16 907 425 : 472 629
பிரான்ஸ் : 5 707 683 : 109 973
துருக்கி : 5 282 594 : 48 068
ரஷ்யா : 5 117 274 : 123 436
பிரிட்டன் : 4 511 559 : 127 836
இத்தாலி : 4 230 153 : 126 472
ஆர்ஜெண்டினா : 3 939 024 : 80 867
ஜேர்மனி : 3 706 934 : 89 825
ஸ்பெயின் : 3 697 987 : 80 196
கொலம்பியா : 3 547 017 : 91 422
ஈரான் : 2 960 751 : 80 941
போலந்து : 2 874 824 : 74 139
மெக்ஸிக்கோ : 2 432 280 : 228 754
தென்னாப்பிரிக்கா : 1 691 491 : 56 929
கனடா : 1 391 174 : 25 712
பாகிஸ்தான் : 932 140 : 21 265
பங்களாதேஷ் : 809 008 : 29 854
சுவிட்சர்லாந்து : 697 292 : 10 832
இலங்கை : 202 357 : 1656
சீனா : 91 248 : 4636

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula