கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்பானிஷ் தீவான கேனரி தீவில் கும்ப்ரே வீஜா எரிமலை சிற்றம் கொண்டு வெடிக்கத்தொடங்கியது.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். எனினும் தொடர்ந்து சிற்றம் அதிகரித்து வருவதாகவும் இதனால் எரிமலை வெடிக்கும் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக 350 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகியுள்ளன. எனினும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை
லா பால்மா தீயணைப்பு வீரர்கள் எரிமலை இருக்கும் பிரதேசங்களின் சுற்றுப்புறத்தில் தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் வெடிக்கும் நிகழ்வுகள் தீவிரமடைந்ததால் தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேறினர் என கூறப்பட்டுள்ளது.