கடந்த சனிக்கிழமை சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் இரு சிறிய ரக விமானங்கள் மோதி விபத்துக்கு உள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர்.
ஆல்ப்ஸ் மலைத் தொடரின் கிழக்கே ஹுபர்டன் என்ற பகுதியில் பறந்து கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விமான விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பதை அறிவதற்கான விசாரணை தொடங்கப் பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மத்திய சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் இடம்பெற்ற சக்தி வாய்ந்த எரிவாயுக் குழாய் வெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. ஷங்வான் மாநிலத்தின் ஷியான் என்ற நகரில் இடம்பெற்ற இவ்விபத்தில் பெருமளவு மக்கள் தமது வீடுகளின் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
இந்த வெடிப்பின் போது 2 அடுக்கு மார்க்கெட் கட்டடம் ஒன்று கடும் சேதமடைந்துள்ளது. தற்போது மீட்புப் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. இந்த மோசமான விபத்தை அடுத்து அனைத்து வர்த்தக உள்நாட்டு எரிவாயுக் குழாய் கட்டமைப்பையும் சோதனை இடுமாறு சீன அரசு குறித்த நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 2015 ஆமாண்டு தியாஞ்ஜின் துறைமுக நகரில் இடம்பெற்ற மிக மோசமான எரிவாயுக் குழாய் வெடிப்பில் 173 பொது மக்கள் கொல்லப் பட்டும் நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்தும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.