ஆப்கான் தலைநகர் காபூலுக்கு வடக்கே 43 கிலோ மீட்டர் தொலைவில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4:34 மணிக்கு 5.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
இத்தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS மற்றும் ஆப்கானின் தேசிய நிலநடுக்கவியல் மையம் ஆகியவை உறுதிப் படுத்தியுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் அதிக சேதம் ஏற்பட்டதாகவோ அல்லது உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை. ஆனாலும் கட்டடங்கள் மற்றும் வீடுகளுக்கு சிறியளவிலான சேதங்கள் ஏற்பட்டதாக ஆப்கான் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.