சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) இரண்டாவது தவணைக்கான ஒப்புதலை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இலங்கை எதிர்பார்க்கிறது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று அறிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே 100 அடிப்படைப் புள்ளிகளால் (bps) 9.00 சதவீதமாகவும் 10.00 சதவீதமாகவும் குறைக்க முடிவு செய்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சேக்களின் பங்கும் உள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே இந்திய ஊடகமான Firstpost க்கு அளித்த பிரத்தியேக பேட்டியின் போது ஒப்புக்கொண்டார்.
செப்டம்பர் மாதத்துக்கான ‘அஸ்வெசுமா’ பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைப்பதற்காக மொத்தம் 8.5 பில்லியன் அந்தந்த வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.