இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு (GOR) 2024 ஜனவரி இறுதிக்குள் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக தொடர்ந்து முன்னேற்றமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வெற்றிடமாக உள்ள கிராம சேவையாளர் பதவிகளுக்கான விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான திகதி செப்டம்பர் 18 மற்றும் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்கு இடையில் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.