free website hit counter

சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்றத்தில் எஞ்சியுள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனங்களை நிரப்புவதற்கு பரிந்துரைக்கப்பட்ட நான்கு பெயர்களை இறுதியாக அறிவித்துள்ளது.

பயிர் அழிவை நிவர்த்தி செய்யும் முயற்சியாக குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடி வேலைத்திட்டம் மாத்தளையில் இன்று ஆரம்பமாகிறது.

அண்மைய சீரற்ற காலநிலை காரணமாக பயிர்கள் அழிவடைந்த விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 100,000 ரூபா பூரண இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பரவி ஏழு உயிர்களை பலிகொண்ட காய்ச்சலானது எலிக்காய்ச்சல் என பொதுவாக அழைக்கப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு இன்று அறிவித்துள்ளது.

உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) இறுதித் தீர்மானம் 2025 ஜனவரி 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என PUCSL அறிவித்துள்ளது.

யாழ்.மாவட்டத்தில் தற்போது பரவி வரும் திடீர் காய்ச்சல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை அல்லது எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பிரோசிஸ்) என உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பதில் சமூக வைத்தியர் டொக்டர் குமுது வீரகோன் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் முழுமையான பாடசாலை சீருடைத் தேவையை சீன அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …