தேசிய சொத்துக்களின் விற்பனை: அனைத்து நகர்வுகளையும் ஒத்திவைக்க விரும்பும் மஹிந்த
சர்ச்சைக்குரிய கூட்டத்தில் மைத்திரி ராஜினாமா மற்றும் SLFP தலைவராக விஜயதாச நியமனம்
12,000 க்கும் மேற்பட்ட இராணுவத்தை விட்டு வெளியேறியவர்கள் மூன்று வாரங்களுக்குள் சட்டப்பூர்வமாக வெளியேற வாய்ப்பு
சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் போது, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து விலகிய 12,000 இற்கும் அதிகமான இராணுவத்தினர், மே 11 ஆம் திகதி வரை உள்ள காலப்பகுதியில் சட்டப்பூர்வ விடுதலையைப் பெற்றுள்ளனர்.
O/L ஆங்கில தாள்களை பகிர்ந்ததில் ஈடுபட்ட ஆசிரியர் கண்டியில் கைது
க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சையின் பொது ஆங்கில வினாத்தாளை வட்ஸ்அப் மூலம் வெளியிடுவதில் ஈடுபட்ட டியூஷன் மாஸ்டர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கலைந்து செல்லும் 'பொது வேட்பாளர்' எனும் மாய மான்! (புருஜோத்தமன் தங்கமயில்)
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது தொடர்பிலான உரையாடல்கள் மெல்ல வலுவிழக்கத் தொடங்கிவிட்டன. ஜனாதிபதித் தேர்தல் வரும் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரையான காலப்பகுதிக்குள் ஒருநாள் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துவிட்டது. அதன்பிரகாரம் பார்த்தால், இன்னும் நான்கு மாதங்கள் மாத்திரமே ஜனாதிபதித் தேர்தலுக்கு இருக்கின்றன. அதற்குள் தகுதியான வேட்பாளர் ஒருவரை கண்டுபிடித்து தமிழ் மக்களிடம் அறிமுகப்படுத்தி வாக்குகளை கைப்பற்றும் ஆற்றல், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை தூக்கிச் சுமக்கும் தரப்பினரிடம் இருக்கின்றதா என்றால், அதற்கான சாத்தியங்கள் இல்லை.