பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) விடுத்த வேண்டுகோளை இங்கிலாந்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையம் நிராகரித்துள்ளது.
தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ‘கருணா அம்மான்’ என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது ஆதரவை வழங்கவுள்ளார்.
வவுனியாவில் இருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் நேற்று இரவு 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தீவின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை ஜூன் 19 ஆம் திகதி முதல் அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.