நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் போர்வையில் இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் அட்டவணையை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் இடமளிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
"நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் என்ற பெயரில் ஜனாதிபதி தனது பதவிக் காலத்தை நீடிக்கச் செய்யும் நோக்கங்களுக்கு சமகி ஜன பலவேகய (SJB) பிடிபடாது" என அவர் மேலும் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எஸ்ஜேபி இன்னும் இருப்பதாகவும், ஆனால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன் என்ற போர்வையில் மக்களின் ஆணையையும் வாக்களிக்கும் உரிமையையும் அழிக்க அனுமதிக்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்