தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியின் கீழ், இறக்குமதி கட்டுப்பாடுகள் மிகவும் திட்டமிடப்பட்ட மற்றும் நுட்பமான முறையில் தளர்த்தப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.
தற்போது விதிக்கப்பட்டுள்ள அந்நியச் செலாவணி உத்தரவுகளில் திருத்தங்கள் மற்றும் அந்நிய செலாவணி கட்டுப்பாடுகளை கட்டம் கட்டமாக நீக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“எந்த விதிமுறைகள் தளர்த்தப்படும் என நாடாளுமன்றத்தில் முன்வைத்து நிதியமைச்சகம் அனுமதி பெற்றதாக நான் நினைக்கிறேன், நான் முன்பே குறிப்பிட்டது போல, தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியின் கீழ், இறக்குமதிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் கட்டம் கட்டமாக, மிகவும் திட்டமிட்டு, நுணுக்கமாகத் தளர்த்தப்படுகின்றன.” என்றார்.
கட்டம் கட்டமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் இது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.