2004 ஆம் ஆண்டு சுனாமி உட்பட நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூர்ந்து இலங்கையில் இன்று தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதற்காக நாடளாவிய ரீதியில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
காலை 09.25 மணி முதல் 09.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக டிஎம்சி மேலும் கூறியது. (நியூஸ்வயர்)