கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களே அதிகளவில் வைத்தியசாலைகளில்
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் மற்றும் ஒட்சிசன் தேவைப்படுடைய கோவிட் தொற்று உறுதியாளர்களின் விபரங்களை திரட்டிய போது அதில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தடுப்பூசி ஏற்றிக் கொள்வாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்ட கோவிட் தொற்று உறுதியார்கள் அதிகளவில் பதிவாகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதனை அவதானிக்க முடிகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களே தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கூடுதலாக சிகிச்சை பெறுவதாகவும், ஒட்சிசன் தேவைப்பாடு இவர்களின் மத்தியில் அதிகளவில் காணப்படுவதாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.