சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது இலங்கையின் பொருளாதார சீர்திருத்த முயற்சிகளை பாராட்டினார்.
ஜோர்ஜீவா தனது நேர் எதிர்பார்ப்புகளை ‘X’ (முன்னாள் ட்விட்டர்) இல் வெளிப்படுத்தினார்.
" WEF24 இல் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பு மிகவும் நல்லது. டிசம்பரில் EFF திட்டத்தின் முதல் மதிப்பாய்வுக்கு IMF வாரியம் ஒப்புதல் அளித்தது, இலங்கை பின்பற்றிய முக்கியமான சீர்திருத்தங்களுக்கு ஒரு அங்கீகாரமாகும். இந்த சீர்திருத்தங்கள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன." என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
இதற்கிடையில், பாகிஸ்தானின் தற்காலிகப் பிரதமர் அன்வார்-உல்-ஹக் கக்கரும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவைச் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, பிராந்திய விவகாரங்கள் மற்றும் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பான பல விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.