2021ஆம் ஆண்டு நடைபெறவிருந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஜனவரி 22ஆம் திகதியும், 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 5ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் மொத்தம் 345,242 பரீட்சார்த்திகள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். இதில் 279,141 பள்ளி மாணவர்களும் 66,101 பேர் தனியார் தேர்வளார்களாகவும் அடங்குகின்றனர்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,438 பரீட்சை நிலையங்களில் நடாத்தப்படுவதுடன் அதற்காக 316 ஒருங்கிணைப்பு நிலையங்கள் செயற்படுகின்றன.
மேலும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு 340,507 தோற்றவுள்ள மாணவர்களில் சிங்கள மொழிமூலத்தில் 255,062 பரீட்சார்த்திகளும் தமிழ் மொழியில் 85,445 பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 2,943 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், 499 ஒருங்கிணைப்பு நிலையங்கள் இயங்கும்.