தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வீதி அபிவிருத்திக்காக சம்பந்தப்பட்ட தலைவர்களின் கீழ் உள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்கு 150 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், கிராமிய அலுவல்கள் அமைச்சின் ஊடாக ரூ.50 மில்லியன் சிறிய வீதிகளின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சவாலான வருடத்தில் வருமானம் மற்றும் செலவுகளை கவனமாக பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.