இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட, மலையக மக்களுக்கு சுமார் பத்துலட்சம் ரூபா பெறுமதியான, மறுவாழ்வு நிவாரணப் பொருட்களை, வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் வழங்கியுள்ளது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு, அத்தியாவசிய பொருட்கள், சமையல் பாத்திரங்கள்,பாய் தலையைணகள் , உடுப்புக்கள், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என்பன அடங்கிய பெருந்தொகுதிப் பொருட்களை, வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் மலையகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

கடந்தவாரம் வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட பொருட்கள், நேற்று முன் தினம், கம்பளை முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட இப்பொருட்கள், அங்கிருந்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ளமக்களின் தேவைகள் அறிந்து, பகிர்ந்தளிக்கபட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக அம்மக்களின் மறுவாழ்வுக்கான மேலும் சில முயற்சிகளை முன்னெடுப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அறிய வருகிறது.

கோவிட் பெருந்தொற்றுக் காலங்களிலும், முன்னைய இயற்கைப் பேரிடர் காலங்களிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருமளவிலான உதவிகளை வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம், ஏற்கனவே வழங்கி உதயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
