இன்று செவ்வாய்க்கிழமை எட்ஜ்பஸ்டொன் மைதானத்தில் இந்திய வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை இந்தியா 28 ரன்களால் வெற்றி கொண்டுள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டு இழப்புக்கு இந்தியா 314 ரன்களைப் பெற்றது.
இந்திய அணி சார்பாக ரோஹிட் சர்மா 104 ரன்களையும், ராகுல் 77 ரன்களையும் குவித்தனர். பந்துவீச்சில் வங்கதேசத்தில் முஸ்தாஃபிஷுர் ரஹ்மான் 10 ஓவர்கள் வீசி 59 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய வங்க தேச அணி 48 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 286 ரன்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியைத் தழுவியது. வங்கதேச அணி சார்பாக சகிப் அல் ஹசன் 66 ரன்களையும், மொஹம்மட் சைஃபுடின் 51 ரன்களையும் குவித்தனர்.
பந்துவீச்சில் இந்திய அணியின் 10 ஓவர்கள் வீசி 55 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். நாளை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தமக்கிடையே பலப் பரீட்சை நடத்துகின்றன. புள்ளிப் பட்டியலில் அவுஸ்திரேலியா தொடர்ந்து 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இந்தியா 13 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலும், நியூசிலாந்து 11 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்திலும் உள்ளன. இலங்கை அணி 8 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்திலும் ஆப்கானிஸ்தான் புள்ளிகள் எதுவும் பெறாத நிலையில் கடைசி இடத்திலும் உள்ளன.