'யூரோ- 2020' கோப்பைக்கான இறுதிப் போட்டி இன்னும் சில மணித்துளிகளில் இலண்டன் வெம்பிளி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டித் தொடரின், காலிறுதிப் போட்டியில் உக்ரைனையும், அரையிறுதிப் போட்டியில் டென்மார்க்கையும் வெற்றிகொண்டு, இங்கிலாந்து அணி இந்த இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது. இது யூரோ கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து கண்டிருக்கும் காவிய வெற்றி என காற்பந்துப் போட்டி விற்பன்னர்களும் விளையாட்டுச் செய்தி நிருபர்களும் வர்ணிக்கின்றார்கள்.
1966 ஃபிஃபா உலகக் கோப்பை வெற்றியின் பின்னர், இங்கிலாந்து ஐந்து முக்கிய போட்டிகளின் அரையிறுதியில் தோல்வியடைந்துள்ளது. யூரோ '68 மற்றும் '96, 1990 மற்றும் 2018 உலகக் கோப்பைகள் மற்றும் 2019 யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் எனும் முக்கியமான தோல்விகளின் பின் கண்டிருக்கும் மகத்தான முன்னேற்றம் இது. தமது தாயகத்திலுள்ள வெம்பிளி அரங்கில், இறுதிப் போட்டியொன்றில் களமாட 55 ஆண்டுகள் காத்திருந்து பெற்ற வெற்றி வாய்ப்பு .
இத்தாலி 1968 ஆம் ஆண்டிலும், 2000 மற்றும் 2012 இறுதிப் போட்டிகளையும் இழந்திருந்தனர். இருப்பினும் அவர்கள் நான்கு உலகக் கோப்பைகளில் இரண்டை வென்றுள்ளனர். 1976 இல் செக்கோஸ்லோவாக்கியாவையும், 1992 இல் டென்மார்க்கையும் 2004 ல் கிரேக்கத்தையும் ஐரோப்பிய போட்டிகளில் வெற்றி கொள்ள முடியாத போதும், 'யூரோ -2020 ' இறுதிப் போட்டிக்கு வலுவான அணியாகவே வந்திருக்கிறது. காற்பந்து விளையாட்டின் கனவு தேசமான இத்தாலிக்கும், இங்கிலாந்துக்கும், இன்னும் சில நிமிடங்களில் தொடங்கும் 'யூரோ 2020' கோப்பைக்கான இறுதிப் போட்டியில் வெல்வது யார் ?