ஐபிஎல் வரலாற்றில் ஆரஞ்ச் கேப்பை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்று சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார்.
இந்த போட்டியில் சிஎஸ்கே தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 32 ஓட்டங்கள் எடுத்தார். ருதுராஜ் 25 ஓட்டங்கள் எடுத்த போது நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
முன்னதாக பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் 13 போட்டிகளில் 626 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இதனை சிஎஸ்கே தொடக்க வீரர் டூ பிளெசிஸ் முறியடித்து 633 ஓட்டங்கள் (16 போட்டிகள்) எடுத்தார்.
எனினும், அதே 16 போட்டிகள் விளையாடிய சென்னை அணியின் மற்றோரு தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 635 ஓட்டங்கள் எடுத்து, இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் ஆரஞ்ச் கேப் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ருதுராஜ் 24 வயதில் ஆரஞ்ச் கேப் வென்று இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.