free website hit counter

ஜேர்மனியில் 'நான்காவது அலைக்கு எதிராக தடுப்பூசி போடுங்கள்' வாரம் !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜேர்மனியில் 'நான்காவது அலைக்கு எதிராக தடுப்பூசி போடுங்கள்' எனும் செயல் வாரம் நேற்று திங்கட்கிழமை ரேம்பமானது.

ஜேர்மனில் நாடளாவியரீதியில் 62 சத வீதத்துக்கும் அதினகமானோர் தடுப்பூசி பெற்றிருப்பினும், அதிகாரிகள் தடுப்பூசி விகிதத்தை 75 வீதமாக அதிகரிக்கும் நோக்கில், இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளார்கள். அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் தலைமைத் தலைவர் ஹெல்ஜ் பிரவுன், "இது தடுப்பூசி வாரத்துடன் முடிவடையாது, வரும் வாரங்களில் தொடரும்." என ZDF தொலைக்காட்சிச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி வாரப் பணிகளில், ஈடுபடும் மொபைல் தடுப்பூசி குழுக்கள், நாடு முழுவதும் நூலகங்கள், பேருந்துகள், கடைகள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் சமூக மையங்கள் போன்ற இடங்களில் நிறுத்தப்பட்டு, கோவிட் தடுப்பூசியைப் பெற தகுதியுள்ளவர்களுக்கு போடுவதற்கு முயற்சி செய்தன. திறந்த நிலையில் இருக்கும் தடுப்பூசி மையங்களில், யாருக்கும் முன் சந்திப்பு தேவையில்லை. சில இடங்களில் தடுப்பூசி போடுபவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இலவச ( கெப்பாப்) சிற்றுண்டி விநியோகங்களும் வழங்கப்பெற்றன.

ஜெர்மனியில் 7 நாட்களில் 100,000 குடியிருப்பாளர்களுக்கு 81.9 நோய்த்தொற்றுகளாக சற்று உயர்ந்துள்ளது. நேற்று திங்களன்று, சுகாதார அதிகாரிகள் 24 மணி நேரத்தில் 5,511 வழக்குகள் மற்றும் 12 இறப்புகளைப் பதிவு செய்தனர். இதனால் வரும் இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் தொற்றுநோயின் கடுமையான நான்காவது அலையைத் தடுக்க உதவுவதே இந்தத் தடுப்பூசிப் பிரச்சாரத்தின் நோக்கமாக உள்ளது.

"நிபுணர்களின் கூற்றுப்படி, நான்காவது அலையை தட்டையாக்க குறைந்தபட்சம் 75 சதவிகித தடுப்பூசி பாதுகாப்பு தேவைப்படுகிறது. நாங்கள் எதுவும் செய்யாவிட்டால், அது கடுமையான தாக்கத்தைத் தரும் அலையாக வரக்கூடும்.. இதன் விளைவாக, மருத்துவமனைகள் மீண்டும் நிரப்பப்படும், குறிப்பாக தடுப்பூசி போடப்படாத மக்களால் நிரப்பப்படும் என்று ஹெல்ஜ் பிரவுன் கூறியுள்ளார்..

இதேவேளை, அக்டோபர் 11 முதல், வைரஸ் பரிசோதனைகள் இலவசமாக இருக்காது. இது தடுப்பூசி போடாதவர்களின் வாழ்க்கையை கடினமாக்கும். ஆகவே இப்போதுள்ள சலுகைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula