எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யூரோ 2020 இறுதிப் போட்டி இங்கிலாந்தில் வெம்பிளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை நேரில் காண இத்தாலி ரசிகர்கள் பலரும் இலண்டனுக்குப் பயணமாக விரும்பிய போதும், 1,000 ரசிகர்கள் வரை மட்டுமே இத்தாலியில் இருந்து லண்டனுக்கு பயணிக்க முடியும் என்று இத்தாலியின் கால்பந்து கூட்டமைப்பு (FIGC) தெரிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை இரவு டென்மார்க்கை வீழ்த்தி, 55 ஆண்டுகளில் முதல் இறுதிப் போட்டியை எட்டிய இங்கிலாந்து இத்தாலி அணியை எதிர்த்து விளையாடும். இந்த இறுதிப் போட்டியை நேரில் காண பிரிட்டிஷ் அதிகாரிகள் இத்தாலியில் இருந்து அதிகபட்சம் 1,000 பேருக்கு மட்டுமே லண்டனுக்குச் செல்வதற்கான சிறப்பு உத்தரவாதம் அளித்துள்ளனர்.
இந்தச் சிறப்பு அனுமதியின் மூலம் வரும் ரசிகர்களுக்கு, இங்கிலாந்தில் தற்போது நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் விதி தேவைப்படாது. ஆனால் சில பிரத்தியேக நடைமுறைகள் கடைப்பிடைக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை 1900 GMT கிக்-ஆஃப் செய்வதற்கு சற்று முன்னதாக ஆதரவாளர்கள் லண்டனுக்கு வரும் அவர்கள் 12 மணி நேரத்திற்கு மேல் இலண்டனில் இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும் அவர்கள் நேரடி விமானங்கள் மற்றும் FIGC ஏற்பாடு செய்த பிரத்யேக போக்குவரத்தைப் பயன்படுத்துவார்கள். மைதானத்திற்குள் நுழைந்தவுடன், இந்த ரசிகர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அமர்ந்து, பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பார்கள். இத்தாலியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, அவர்கள் அனைவரும் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பிரிட்டனில் இருந்து திரும்பி வரும் அனைத்து பயணிகளுக்கும் இத்தாலிய விதிகளின்படி, அவர்கள் திரும்பி வரும்போது வீட்டில் ஐந்து நாள் தனிமைப்படுத்தலை கடைபிடிக்க வேண்டும் எனும் சிறப்பு விதிகள் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த ரசிகர்களின் விமானப் பயணங்களுக்கு ஒரு நபருக்கு 610 யூரோ செலவாகும் எனவும் போட்டிக்கா நுழைவுக்கட்டண டிக்கெட்டுகள் 95 யூரோக்களுக்கு விற்கப்படும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.