ஜேர்மனி வைரஸ் புதிய தொற்றுக்கள் அதிகரிப்புக் காரணமாக, கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீண்டும் கடுமையாக்குகிறது.
சுவிற்சர்லாந்தில் இருந்து ஜேர்மனிக்குச் செல்லும் அனைத்துப் பயணிகளுக்கும், நாட்டின் நில எல்லையை கடக்க, முழுமையான தடுப்பூசிச் சான்றிதழ், அல்லது எதிர்மறை சோதனை சான்று தேவை. இந்த நடவடிக்கை நாளை ஆகஸ்ட் 1 ஞாயிற்றுக்கிழமை முதல் அமல்படுத்தப்படும் என சுவிஸ் செய்தி நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கிறது.
ஜேர்மனிக்கு தற்போது, விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு, தடுப்பூசி, அல்லது நோய் மீட்பு அல்லது எதிர்மறை சோதனை எனும் மூன்றிலொரு சான்று தேவைப்படுகிறது. இதே சோதனைத் தேவையை நிலம் வழியாக வருபவர்களுக்கு ஜேர்மனின் கூட்டாட்சி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை முதல் எல்லைகளில் மேற்கொள்ளத் தொடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சுவிற்சர்லாந்து அரசியலில் வெளிநாட்டவர்கள் நிலை..?
ஜேர்மனி அதன் பல ஐரோப்பிய அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், கோடையில் குறைந்த தொற்றுக்களைக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக டெல்டா மாறுபாட்டால் பெரிய அளவில் தொற்றுக்கள் அதிகரித்து வருகின்றன.
ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (ஆர்.கே.ஐ) சுகாதார நிறுவனக் கணக்கின் படி, கடந்த 24 மணி நேரத்தில், நாடு 2,454 புதிய தொற்றுக்களைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.