சுவிற்சர்லாந்தில் கோவிட் பெருந் தொற்றின் பரவுதல், மருத்துவமனையில் சேருதல் மற்றும் இறப்புகள் ஆச்சரியத்துக்குரிய வகையில், வீழ்ச்சியடைந்துள்ளன. இப் பெருந்தொற்றினை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இப்போது முக்கிய உணர்வாக மக்களிடத்தில் எழுந்துள்ளது.
இருப்பினும், வல்லுநர்கள் உட்பட, பலரும் இலையுதிர் காலத்தில் நான்காவது அலை குறித்து முன்னறிவித்து வருகின்றார்கள். கடந்த அமைதியான கோடைகாலத்திற்குப் பிறகு, இலையுதிர்காலத்தில்அனுபவித்ததை நினைவு கூர்ந்து அவர்கள் இந்த எச்சரிக்கையினை முன் வைக்கின்றனர்.
ஆயினும், சூரிச் மருத்துவ சங்கத்தின் தலைவர் ஜோசப் விட்லர் இந்த அதிகப்படியான எச்சரிக்கை அவசியமற்றது என்கிறார். "வைரஸின் பிறழ்வுகள் இருந்தபோதிலும், பீதி அடைய வேண்டிய அவசியமில்லை" என்று அவர் கூறுகிறார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போதைய அலை இரண்டாவது அலைக்கு முன்னர் இருந்ததைவிட முற்றிலும் மாறுபட்டது. , பல முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றபோது, அவர்கள் யாரும் தடுப்பூசி போடவில்லை . டெல்டா மாறுபாடு மிகவும் வேகமாகப் பரவும் தொற்றுநோய் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். ஆனால் பிரித்தானியா மற்றும் போர்ச்சுகலில் அதிகரித்து வரும் தொற்றுக்களில் மட்டுமே கவனம் செலுத்துவது மிக முக்கியமான அம்சத்தை மறைக்கிறது.
சுவிற்சர்லாந்தில் இறப்பு விகிதங்கள் மற்றும் கடுமையான நோய்த்தொற்றுகள், மிகக் குறைந்துள்ள நிலையில், நம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று இறப்புகளின் சராசரி வயது 85 ஆண்டுகள் ஆகும். இது நடைமுறையில் ஆயுட்காலம் போன்றது என்று அவர் மேலும் கூறுகிறார்.
" அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன், நாங்கள் பொறிமுறையை மாற்றியமைக்க வேண்டும். தடுப்பூசி பெறாத எவரும் ஆபத்தைத் தேர்வு செய்கிறார்கள், யார் அதைச் செய்தாலும் அவர்கள் இனி வரம்புகளுக்கு உட்பட்டிருக்கக்கூடாது" எனவும் அவர் கூறினார்.