இத்தாலியில் மீண்டும் கோவிட் தொற்றுக் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கும் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பண்டிகைக் காலத்தில் சுகாதாரக் கட்டுப்பாடுகள் மீளவும் விதிக்கப்படுமா ? எனும் ஐயம் பரவலாகக் காணப்படுகிறது.
இத்தாலியின் சுகாதார அமைச்சகம் ஒவ்வொரு வாரமும் மோசமான நிலைமையை அறிக்கையளித்து வருவதால், வரவிருக்கும் மாதங்களில் சில பிராந்தியங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்படலாம் என்று தெரிகிறது. இது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கான காலங்களில் மேலும் அதிக்கப்படலாம் எனும் ஐயமும் எழுந்துள்ளது. ஆனால் தொற்றுநோய் உயர்வுக்கு மத்தியில், இந்த ஆண்டு விடுமுறை காலம் இத்தாலியின் சென்ற ஆண்டு விடுமுறைக் காலத்திலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும். கடந்த ஆண்டு கடுமையான 'சிவப்பு' மற்றும் 'ஆரஞ்சு' மண்டல கட்டுப்பாடுகள் பயணம், நிகழ்வுகள் மற்றும் சமூகமயமாக்கலை கடுமையாக மட்டுப்படுத்தியது மற்றும் பெரும்பாலான மக்கள் கிறிஸ்துமஸ் தினத்தை அமைதியாக கழித்தனர்.
இத்தாலியிலும் அதற்கு அப்பாலும் அதிகரித்து வரும் வளைவு இருந்தபோதிலும், இந்த ஆண்டு இதுபோன்ற இறுக்கமான கட்டுப்பாடுகள் திரும்புவது இதுவரை சாத்தியமில்லை என்றே, சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள், நோய்த்தொற்று மற்றும் மருத்துவமனையில் சேர்க்கும் விகிதங்கள் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக உள்ளது மற்றும் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இவற்றினடிப்படையில், விடுமுறை நாட்களில் மேலும் கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று இத்தாலிய அரசாங்கம் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது. சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா இது தொடர்பில் கூறும்போது, "மருத்துவமனை வார்டுகளைத் தொடர்ந்தும் குறைவாகப் பேண முடிந்தால், இம்முறை கிறிஸ்துமஸ் கோவிட்டுக்கு முந்தைய ஆண்டுகளைப் போல கொண்டாடக் கூடியதாக இருக்கும். அதேவேளை சுகாதார நிலை மோசமடைந்தால், சென்ற ஆண்டு போலவே வண்ண அமைப்பு அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என அவர் எச்சரித்தார்.
இத்தாலியின் துணை சுகாதார அமைச்சர் Pierpaolo Sileri " இந்த ஆண்டு அமைதியான கிறிஸ்துமஸில் நாம் நம்பிக்கை வைக்க முடியும். தடுப்பூசி போடப்பட்ட பலருக்கும், மற்றும் பசுமை பாஸ் அமைப்புக்கும் நன்றி" என்று கூறஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் சுகாதார வல்லுநர்கள்ஐரோப்பா முழுவதும் தொற்றுநோய்கள் அதிகரித்து வருவதால் இத்தாலியில் உள்ளவர்கள் தங்கள் பாதுகாப்பைக் கைவிடக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.